மும்பை
ஹிந்தியில் அக்ஷய் குமார், வித்யாபாலன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து "மிஷன் மங்கள்" என்ற வெளியான படம் கடந்த வருடம் வெளியாகி ஹிட்டானது. ‘மங்கள்யான்’ விண்ணில் செலுத்திய வரலாற்றை முன்வைத்து எடுத்த இப்படத்தை இயக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் ஜெகன் சக்தி.
தற்போது தமிழில் ஹிட்டான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த "கத்தி" திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென்று ஜெகன் சக்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் கட்டி இருப்பது மிகவும் உயிருக்கு ஆபத்தானது என்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.