சென்னை
1980-களில் தென்னிந்திய திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் பி.கண்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இதில் 40 படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் தான்.
இந்நிலையில் 69 வயதாகும் (?) கண்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்றும் இருதய பிரச்சனை சரியாகாத நிலையில், இன்று மதியம் கண்ணன் உயிரிழந்தார்.
அவரது உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜுன் 14) பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. கண்ணனின் மறைவிற்கு திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறந்த கண்ணன் பாரதிராஜவின் நெருங்கிய நண்பரும் என்பது குறிப்பிடத்தக்கது.