tamilnadu

img

நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி 

சென்னை 
தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ், திரைத்துறையில் மட்டுமின்றி மக்கள் சேவை தொடர்பான செயல்களிலும் பணியாற்றி வருகிறார். இதனால் லாரன்ஸ் பெயரில் மக்கள் சேவை நற்பணி மன்றம் என்ற அமைப்பும் உள்ளது. இந்நிலையில் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் சங்கர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புதனன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்,"நடிகர் ராகவா லாரன்ஸ் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இணையதளம் மூலமாக போலியான ஐ.டி-யுடன் (பயனர்) தவறான முறையில் பணம் வசூல் செய்து வருகின்றனர். குறிப்பாகச் சேலம், ஊட்டி, ராமநாதபுரம், பெங்களூரு மற்றும் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் வீடு கட்டி தருவதாகக் கூறி மோசடிகள் நிகழ்கின்றன. இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களும், ரசிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்றால் உண்மையான ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையை அணுகவும் எனவும் கூறியுள்ளார்.