புதுச்சேரி, செப்.2- புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள மாநில சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறைக்கு வந்த புகாரை அடுத்து திங்களன்று (செப்.2) நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து பேசிய மர்ம நபரின் செல்பேசியை வைத்து விசாரித்ததில், புதுச்சேரி முத்தியாள்பேட் சோலை நகர் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.