கடந்த 2017-ஆம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வினாத்தாள் முறைகேடு செய்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேராசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் இரண்டாவது பருவத் தேர்விலும் மற்றும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் அரியர் தேர்விலும் வினாத்தாள் முன்னதாக வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட தற்காலிக பணியாளர்கள் தேர்வு எழுதிய மாணவர்களிடம் ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை பணம் பெற்றுக்கொண்டு கேள்வித்தாள் மற்றும் அதற்கான பதிலை எழுதுவதற்காக விடைத்தாளையும் கொடுத்தது உறுதியானது.
இதை அடுத்து 37 தற்காலிக பணியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், தற்போது, விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர்கள் 4 பேரை அண்ணா பல்கலைக்கழகம் பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.