விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்
மதுரை, மார்ச் 19- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணைய தொகுதி- 4, தொகுதி- 2 ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறை கேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தொகுதி-4 தேர்வில் முறை கேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளாக உள்ளனர். இந்த வழக்கில் உயரதிகாரி களுக்கு தொடர்புள்ளது. தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் இதன் விசாரணையை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட உயரதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை வியாழனன்று விசா ரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி காவல்துறையினரும், சிபிஐ காவல்துறையினரும் பதி லளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி சார்பில் சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சந்திரசேகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ கத்தில் 2016-19 தொகுதி- 4, தொகுதி- 2 ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவ ணங்கள், பணம், தங்க நகை, வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் கீழ் நிலை ஊழியர்கள் உதவியுடன் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் சிலர் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேர்வாணைய முறைகேடு வழக்கு முக்கியக் கட்டத்தில் உள்ளது. சிபிசிஐடி காவல்துறையினர் நியாய மாகவும், சுதந்திரமாகவும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை உயரதிகாரிகளின் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை உயர திகாரிகளின் தொடர்பு இல்லாமல் தான் இவர்கள் இதுபோன்ற முறை கேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே சிபிஐ விசார ணைக்கு மாற்ற வேண்டியதில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.