tamilnadu

img

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து

சென்னை, ஏப்.19 - சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் செயல்பட்டு வரும்  கீழமை நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி 31ஆம் தேதி வரை  விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படு கிறது. மே 2 முதல் 31ஆம் தேதி வரை வழக்கம்  போல் நீதிமன்றம் செயல்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை  நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.