tamilnadu

img

கைதிகளுக்கு கொரோனா! அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை:
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள சரவணன் என்பவருக்கு ஆறு வாரம் பரோல் கேட்டு அவரது மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை செவ்வாயன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு நடைபெற்றது.அப்போது, தற்போது சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும் சிறைக்கைதி சரவணனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.