வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாதர் சங்கம் வரவேற்பு
சென்னை.பிப்.4- சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேருக்கும் தண்டனையும் இதில் 4 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் விதித்துள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் 2018 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை காது கேளாத 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் தொடர்ச்சியாக ஆறு மாதகாலம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இச்செய்தி அறிந்த போது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது குற்றவாளிகள் தரப்பில் வழக்கை நடத்தவிடாமல் தடுப்பதற்கு ஏராளமான தடைகளை ஏற்படுத்தி உள்ள னர். பலமுறை மனுக்கள் போட்டு காலநீட்டிப்பு செய்துள் ளனர். இருப்பினும் தொடர்ச்சியாக காவல்துறையும் அரசு தரப்பு வழக்கறிஞரும் கடுமையான முயற்சி எடுத்து குற்றத்தை நிரூபித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து பல மிரட்டல்கள் விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்து சாட்சியம் அளித்துள்ள னர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள், வழக்கை திசை திருப்ப குற்றவாளிகள் தரப்பு வழக்கறி ஞரின் முயற்சிகள் ஆகியவைகளையும் தாண்டி சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை 11 மாத காலத்திற்குள் வழங்கி யுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
அரசு வழக்கறிஞர்,காவல் ஆய்வாளர் செயல்பாடு பாராட்டுக்குரியது
தர் சங்க மாநிலக்குழு வரவேற்கிறது. அரசு வழக்க றிஞர் ரமேஷ், அயனாவரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரது முயற்சி குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டது இத்தீர்ப்புக்கு முக்கிய காரணமாகும், பாராட்டுக் குரியதாகும். அது சமயம் சம்பவம் நடந்ததை கேள்விப் பட்டதில் இருந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில மையமும்,வடசென்னை மாவட்ட குழுவும் இதில் தலையிட்டு பல போராட்டங்கள் நடத்தியது தொடர்ந்து கண்காணித்து வந்ததும் குறிப்பி டத்தக்கதாகும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்துவருகிறது. பொதுவாக பலர் வீடுகளை வாங்கும்போது தனி வீடாக இருந்தால் பாது காப்பு இல்லை, அடுக்குமாடி குடியிருப்புகளில் பாது காப்பு இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடுக்குமாடி குடி யிருப்பில் ஐந்தாவது மாடியில் 5 வயது குழந்தை பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்ததும், தாம்பரம் போரூர் அருகே இரண்டாவது மாடியில் ஹாசினி என்ற 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்ததும் நடந்துள்ளது. தற்போது அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரச் சம்பவம் நடந்தது போன்றவை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து வாய் திறக்காத தமிழக அரசு.காவல்துறை ஏராளமான வழக்குகளை பதிவு செய்யாமல் எப்ஐஆர் போடாமல் அலைக்கழிப்பதும் பெரும்பாலான வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்து சுலபமாக வழக்கை முடிப்பது போன்ற வைகளால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுவதற்கு உதவுகிறது. ஆனால் மாறாக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதும் பெண் குழந்தைகளை வைத்தி ருப்பவர்கள் அச்சத்துடன் வாழும் நிலையும் நீடிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அயனாவரம் மாற்றுத் திறனாளி குழந்தையின் வழக்கில் கொடுக்கப்பட்டிருக்க இத்தீர்ப்பு பல குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு இடைக்கால நிவாரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தொகை அச் சிறுமியின் எதிர்காலத்தை பாதுகாக்க போதுமானதாக இருக்காது. எனவே 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கான போர்க்கால நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.