கைதான 5 பேருக்கு பிப்.11 வரை நீதிமன்ற காவல்
கோவை,ஜன.28- தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலி யல் குற்ற வழக்கில் கைதான 5 பேரையும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசா ரித்து வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணன், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்தவாறே திங்கட்கிழமை வீடியோ கான் பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்ற காவலை ஒரு நாள் நீட்டிப்பதாகவும் வெள்ளிக் கிழமை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார். இதனையடுத்து 5 பேரும் கோவை அழைத்துவரப் பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். 5 பேரையும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி உத்தரவிட்டார்.