ஸ்ரீவில்லிபுத்தூர்:
கொரனோ ஊரடங்கு காலத்தில் சிரமப்பட்டு வரக்கூடிய திருநங்கைகளுக்கு விருதுநகர் எல்ஐசி கிளையின் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.
நிகழ்வில் சங்கத்தின் கிளை தலைவர் பாண்டி குமார் தலைமை தாங்கினா.ர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், நகர் காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ,நகர செயலாளர் ஜெயக்குமார் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில குழு உறுப்பினர் திருமலை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரேணுகா தேவி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிளை பொருளாளர் குரு ராகவேந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்