tamilnadu

img

குற்றம் பற்றி புகார் அளித்த அதிகாரி ஜோஷி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது நியாயம் தானா?


சமூக ஊடகங்களில் வெளியாகின்ற வெறுப்பு பேச்சுகள் வன்முறையைத் தூண்டுவதாக இருக்கின்றன. இவ்வாறு வன்முறையைத் தூண்டுகின்ற நபர்கள் எவ்விதப் பிரச்சனையுமின்றி நிம்மதியாகத் திரிகின்ற போது, அத்தகைய பேச்சுக்கள் குறித்த புகாரினைப் பதிவு செய்பவர்கள் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

2019 பிப்ரவரி 26 அன்று தொலைத் தொடர்பு துறை அதிகாரியான ஆஷிஷ் ஜோஷி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். சர்ச்சைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா தன்னுடைய முகநூலில் வெளியிட்ட வீடியோ குறித்து புகார் அளித்த அடுத்த நாளே ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். பர்கா தத், பிரசாந்த் பூஷன், கமல்ஹாசன், நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மீது தாக்குதலை நடத்துமாறு அந்த வீடியோவில் மிஸ்ரா அழைப்பு விடுத்திருந்தார். இவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருபவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார். வீடுகளில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தெருக்களுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தார்.

தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, மேலதிகாரிகள் அனுமதி இல்லாமல் தொலைத் தொடர்பு துறையின் அலுவலக லெட்டர் பேடில் ஜோஷி அந்தப் புகாரை அளித்திருப்பதாக தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தனர். பொதுநலனைக் கருதியே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறிய ஜோஷி, அலுவலக லெட்டர் பேடைப் பயன்படுத்தியது என்பது இரண்டு அரசு ஊழியர்கள் தங்களுக்கிடையே தொடர்பு கொள்கின்ற முறையான வழிமுறையாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது 50% ஊதிய வெட்டுடன் ஜோஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பெரும்பான்மை கொண்ட அதிகாரத்திற்கு எதிரான கருத்து வேறுபாடு உங்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பணியிடைநீக்கம் சொல்கின்ற மிகத் தெளிவான செய்தியாக இருக்கிறது. 


சமூக ஊடகங்களும் வெறுப்பு பேச்சுகளும்


பெரும்பான்மை கொண்ட அதிகாரத்தால் சமூக ஊடகங்களில் மனவருத்தம் தருகின்ற வகையில் பதிவு செய்யப்படுகின்ற கருத்துக்களுக்கு எதிராகத் தங்களுடைய குரலை எழுப்பி துணிச்சலுடன் செயல்படுகின்ற செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகளில் முடிகின்ற பல தாக்குதல்களின் போக்கினைக் காட்டுகின்ற வகையிலேயே அந்த வீடியோ இருந்தது. இவ்வாறு சிறுபான்மையினர், செயற்பாட்டாளர்கள், தனிநபர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று அந்தப் புகாரின் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட குற்றம் இங்கே விவாதத்திற்குரியதாகப்பட வேண்டும்.

கண்காணிப்புக் குழுக்கள், தீவிரவாதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைப் பரப்ப முயற்சிப்பவர்களுக்கான சிறந்த தளங்களாக முகநூல், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்றவை மாறி வருகின்றன. லவ் ஜிகாத் செய்தார்கள் என்று சில முஸ்லீம் ஆண்களைத் தாக்கச் சொல்லி மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பட்டியல் ஒன்று சமீபத்தில் முகநூலில் வெளியிடப்பட்டது. தனிநபர்களை இலக்காகக் கொண்டு, அவர்களைத் தாக்குமாறு பல பிரிவுகளைச் சார்ந்த மதத் தலைவர்களும் சமூக ஊடகங்களில் மிகவும் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

எதிர்கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற நபர்களை இலக்காகக் கொண்டு மிகத்தீவிரமான கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி தைரியமாகச் சொல்பவர்கள் ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடர்பவர்களாக இருக்கின்றார்கள். பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமன கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களைப் பின் தொடருகின்ற வகையில் மோடியின் ட்விட்டர் கணக்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த போது, மோடி சுதந்திரமான பேச்சுக்கு ஆதரவளிப்பதாகவும், ட்விட்டரில் தன்னைப் பின்தொடர்பவர்களாக இருக்கும் யாரையும் அவர் முடக்கி வைப்பதோ அல்லது அவர்களைப் பின் தொடராமல் இருக்கும் வகையில் அவர் நிறுத்தி வைப்பதோ கிடையாது என்று பிரதமரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தனிநபர்களை ட்ரோலிங் செய்வது, அச்சுறுத்துவது மற்றும் ஆன்லைன், ஆப்லைன் என்று திட்டமிட்டு அவதூறு செய்கின்ற தவறான போக்குகள் அதிகரித்து வருகின்றன. மத நம்பிக்கைகள், பாலினம், பாலியல் சார்பு, சித்தாந்தம் அல்லது ஏதொவொரு மோசமான காரணம் என்று பலவகையான காரணங்களை முன்னிறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர். ஆதாரம் எதுவுமில்லாத குழந்தை கடத்தல் என்ற வாட்ஸ் ஆப் வதந்திகளின் பேரில் கடந்த ஆண்டு பலர் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் முகவரி மற்றும் அந்தரங்கத் தகவல்களை ஆன்லைனில் வெளியிட்டு, அவர்களைத் தாக்குவதற்கான வெளிப்படையான அழைப்புகள் விடப்பட்டது குறித்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் எவ்விதப் பிரச்சனையுமின்றி வெறுப்புணர்வு பேச்சுகள் இடம் பெறலாம் – ஆனால் அது குறித்து புகார் தெரிவிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் ஸ்ருதி காவேரி அய்யர், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகம் பயிலும் மாணவி. சர்வதேச மற்றும் உலக விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2018 மார்ச் 30, தி வயர் இணைய இதழ்அச்சுறுத்தல்களும், வன்முறைத் தூண்டுதல்களும்

முஸ்லீம் பேரரசருக்கும், ஹிந்து இளவரசிக்கும் இடையே ஒரு நெருக்கமான காட்சி பத்மாவத் திரைப்படத்தில் இருப்பதாகக் கூறி ஆறு மாதங்களுக்கு முன்னர், நடிகை தீபிகா படுகோனே மற்றும் திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரை தாக்குபவர்களுக்கு ரூ.10 கோடி வெகுமதி அளிக்கபப்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஜ் பால் அமு அறிவித்திருந்தார்.

பிரபல இஸ்லாமிய அறிஞரும், அசாம் மாநிலத்தைச் சார்ந்த அரசியல்வாதியுமான மௌலானா பத்ருதின் அஜ்மல் பத்திரிகையாளர் ஒருவரைப் பகிரங்கமாக திட்டி, மண்டையை உடைத்து விடப் போவதாக அச்சுறுத்துவதாக இருந்த வீடியோ அண்மையில் வைரலானது.

இறுதியில் அந்த இரண்டு அரசியல்வாதிகளும் பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், அவ்வாறான வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியிடப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது, அவர்களுக்கான தளத்தை சமூக வலைப்பின்னல் வழங்குவதால்தான் நடைபெறுகிறதா? அல்லது இத்தகைய வெறுப்பு பேச்சுக்களுக்கு தண்டனை எதுவும் வழங்கப்படாது என்பதை அறிந்திருப்பதால், சமூக ஊடகங்களை அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்தெடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்களா?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் ட்வீட் செய்ததாக ட்விட்டர் பயனாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். அவருடைய ட்வீட் தங்களுடைய விதிகளை மீறுவதாக இல்லை என்று ட்விட்டர் நிறுவனம் அந்தப் புகாருக்கு பதிலளித்தது. அந்தப் பத்திரிகையாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டாலும், அடுத்த நாளே அது மீட்கப்பட்டது. அந்தப் பத்திரிகையாளர் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்ட அமலாக்கம் மற்றும் சமூக ஊடகக் கொள்கைகள் போன்றவை திறமையற்றிருப்பதன் மூலம் பாதுகாக்கப்படுவதால், இவ்வாறான வெறுப்பு பேச்சுகளின் ஆதரவாளர்கள் துணிச்சல் அடைகின்றனர். இவர்களில் சிலருக்கு இருக்கின்ற அரசியல் மற்றும் பொதுமக்கள் ஆதரவு சட்ட அமலாக்கத்தின் தலையீட்டிற்குத் தடையாகவும் இருக்கிறது.

மிகப் பிரபலமாக இருக்கின்ற அரசியல்வாதிகள், சட்டத்தை அமலாக்குகின்ற அதிகாரிகளும் கூட இவ்வாறான தாக்குதலில் இருந்து தப்புவதில்லை. மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு ஏற்பட்ட கடவுச் சீட்டு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அந்தப் பிரச்சனையில் தலையிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்ரோல் செய்யப்பட்டார். கும்பல் தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லீம் ஒருவரைக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி சமூக ஊடகங்களில் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்.

நடவடிக்கை எடுப்பதில் ட்ரோலிங் என்பது மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது. ஆனாலும், சமூக ஊடகங்களில் நடத்தப்படுகின்ற நேரடி அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் போன்றவற்றை எளிதில் எதிர்கொள்ள முடியும். இத்தகைய ஆன்லைன் செய்திகள் பெருக்க விளைவைக் கொண்டவையாக இருப்பதால், இந்த குற்றங்களைப் பற்றி புகாரளிப்பதற்கு உரிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, ஆதரிக்கப்பட வேண்டும். தகவல் அளிக்கப்பட்ட உடனேயே இந்தப் புகார்கள் விரைவாக கவனிக்கப்பட்டு, வேறு யாரும் பாதிக்கப்படுவதற்கு முன்னால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றங்களைச் செய்தவர்கள் நிம்மதியாக எவ்விதப் பிரச்சனையுமின்றி நடமாடிக் கொண்டிருக்கும் போது, அத்தகைய குற்றம் பற்றி புகார் அளித்த அதிகாரி ஜோஷி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது நியாயம் தானா?

 

நன்றி: https://thewire.in/rights/hate-speech-social-media

ஸ்ருதி காவேரி அய்யர், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகம் பயிலும் மாணவி. சர்வதேச மற்றும் உலக விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2018 மார்ச் 30, தி வயர் இணைய இதழ்