tamilnadu

img

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு இலவசமாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் சிவகாசி மெக்கானிக் : குவியும் பாராட்டு

சிவகாசி 
உலகம்  முழுவதும் பெரும் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருவோரின் இரு சக்கர வாகனங்கள் பழுது ஏற்பட்டாலோ அல்லது டயரில் பஞ்சர் ஏற்பட்டாலோ அதனை  இலவசமாக  சரி செய்து கொடுத்து வருகிறார்  சிவகாசியை சேர்ந்த மெக்கனிக் செல்வராஜ். இவரின் இந்த சேவை பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்த சேவை முயற்சி கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பலர் செல்வராஜை பாராட்டி வருகின்றனர். 

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், கொரோனோ தடுப்பு பணிகளில் தன்னால் நேரடியாக ஈடுபட முடியாது. நிதியுதவி  செய்ய முடியாத நிலையில் உள்ளேன். எனவே,   தான் செய்து வரும் மெக்கானிக் தொழில் மூலமாக தன்னால் இயன்ற சேவையாக இந்தப் பணியை செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கொரோனோவை கட்டுப்படுத்த தன்னலம் பாராமல் களப்பணியாற்றி வருபவர்களுக்கு தன்னலம் பாராமல் இலவச சேவையாற்றி வரும் இவரின் செயல்பாட்டிற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவித்து வருகிறது