சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் நாகமுகுந்தன்குடி ஊராட்சியில் உள்ள பட்டியலின குடியிருப்புப் பகுதிகளுக்கு பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை புகார் எழுந்துள்ளது.
தங்கள் பகுதி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா எனக் கேள்வியெழுப்பும் பட்டியலின மக்கள், ஊராட்சியின் மற்ற கிராமங்களில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கப்படுகிறோம்.
எங்கள் ஊரைக் கடந்து செல்லும் காவிரி கூட்டுக் குடிநீரை பக்கத்து ஊரில் மக்கள் டேங்க் மூலம் பயன்படுத்துகின்றனர். நாங்கள் தினமும் குடி தண்ணீருக்காக அலைகிறோம்.தண்ணீர் பிரச்சனை, அடிப்படை வசதிகள் குறித்து யாரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். புகாரளிப்பவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்கின்றனர் பட்டியலின மக்கள்.மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி பட்டியலின மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டும்.