சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியத் தலைவர் சண் முகவடிவேல் தலைமையில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் மீனாள், ஒன்றியக் கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசாமி, கலைமாமணி, பழனியப்பன், ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலட்சுமி, சகாதேவன், பரமேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஒன்றியத்த லைவர் சண்முகவடிவேல், “சிவகங்கை மாவட்ட கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து ஐந்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பாசன நீருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இதுவரை பராமரிக்கப்படாத ஊரணி, கண்மாய்கள் பராமரிக்கப்பட உள்ளது. ஒன்றியக் கவுன்சிலர்கள் அவரவர் பகுதியில் உள்ள நீராதாரங்களை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுமனைப் பட்டா மனுக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து தகவலை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் செய்தால் அவர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.