tamilnadu

img

மோடி அரசால் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது!

கோவை, ஆக.25– மத்திய மோடி ஆட்சியின்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற  கார்ப்பரேட் ஆத ரவு நடவடிக்கையின் விளைவாக இந்திய பொரு ளாதாரமும், உற்பத்தித்துறையும் ஆழமான நெருக்கடியின் துவக்கத்தில் உள்ளது.  இது மென்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ள தாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எச்சரிக்கை செய்தார். சிஐடியு கோவை மாவட்ட 12 ஆவது மாவட்ட மாநாடு கோவை துடியலூரில் ஞாயிறன்று சிஐ டியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை யில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடை பெறும் இம்மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், கடந்த முறை அதிகாரத்தில் அமர்ந்திருந்த மோடி தலைமையிலான பாஜக மக்கள் விரோத நட வடிக்கையில் ஈடுபட்டது. இதன் விளைவாக ஒட்டு மொத்த மக்களும் கடும் பாதிப்புக் குள்ளாகினர். இந்நிலையில் நடைபெற்ற தேர்த லில் மிருக பலத்தோடு மீண்டும் ஆட்சியில் பாஜக அமர்ந்திருக்கிறது. 

தற்போது 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்படுகிறது.  நூற்றுக்க ணக்கான தியாகிகளின் தியாகத்தால் போரா டிப்பெற்ற உரிமை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள சட்டப்படி நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் ஒரு நிறுவனத்தை முதலாளி நினைத்தால் மூட முடியாது. ஆனால் தற்போது அதனை 300 தொழிலாளர்கள் என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. இதன்படி சுமார் 85 சதவீத தொழிற்சாலைகள் தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம்தான் முதல் எதிரி என ஹிட்லர் நினைத்தார். தற்போது மோடியும் அப்படியே நினைக்கிறார்.  தொழிலாளி வர்க்கத்தை நிராயுத பாணியாக மாற்றுவது என்பது இவர்களது பிரதான இலக்கு.  வளர்ச்சி என்று கூறி அதிகாரத்தில் அமர்ந்த மோடி அரசை கண்டு தற்போது முதலாளிகளே கதறத்தொடங்கியுள்ளனர். இதன்காரண மாகத்தான் பஜாஜ், எல் அன்ட் டி போன்ற முதலாளிகள் தெருவிற்கே வந்து பேசத்துவங்கி யுள்ளனர். மேக் இன் இண்டியா என்பது பொய், பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் வேலை வாய்ப்பை ஏற்றுமதி செய்கிறோம் என வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளனர்.

முட்டுக் கொடுக்கும் தமிழக அரசு

அதேநேரத்தில் மோடி அரசிற்கு முட்டுக் கொடுக்கும் குச்சியை கையிலேந்தி தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் தொழில்கள் மூடல், 5 லட்சம் தொழிலா ளர்கள் வெளியேறி விட்டார்கள் என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்த தொழில்துறை அமைச்சர் தற்போது வாகன உற்பத்தி துறை யில் ஏற்பட்டுள்ள மந்தத்திற்கு காரணம் சென்னையில் ஓடுகிற மெட்ரோ ரயில் என்கிறார். வைகை அணையில் தெர்மோகோல் விடுகிற அறிவாளி அமைச்சர்களை கொண்டதாக தமி ழகம் இருப்பது பெரும் வேதனை. தற்போது பெரு நிறுவனங்களில் மாதத்திற்கு 8 நாட்கள் வேலை இல்லை, சம்பளம் இல்லை என அறி வித்து விட்டார்கள். இது நிரந்தர தொழிலா ளர்களுக்கு என்றால் மறுபுறம் லட்சக்கணக்கான காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

விவசாய நெருக்கடியால் ஆயிரக்கணக் கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் அவர்களுக்கு நிவாரணம் இல்லை. பணியில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கும் எந்த நிவாரணமும் இல்லை. ஆனால் லாபத்தை குவித்த முதலாளிக்கு நெருக்கடியில் இருந்து மீள மீண்டும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை என்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் சமூக நலத்திட்டத்திற்கு செய்ய வேண்டிய பணி களை செய்யவில்லை என்றால் இனி கிரிமினல் நடவடிக்கை இருக்காது; சிவில் நடவடிக்கை தான் என்கிறார்கள்.  தொழிலாளிகளுக்கு கட்ட வேண்டிய பிஎப், இஎஸ்ஐயில் இருந்து சலுகை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறி விக்கிறார். மோடியின் ஆட்சியில் கார்ப்பரேட்டு கள் ‘மூத்த மருமகனாக’ உபசரிக்கப்படுகின்ற னர். எளிய மக்களைப் பற்றி கவலை கொள்ளாத இந்த அரசால் எந்த நெருக்கடியும் தீரப்போவ தில்லை. ஏற்கனவே லாபத்தை குவித்து வைத்தி ருக்கிற முதலாளியிடம் இருந்து எடுத்து பாதிப்புக்குள்ளாகியிருக்கக்கூடிய தொழிலாளிக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் சம்பளம் என அளித்தால் மட்டுமே சமாளிக்க முடியும். ஆனால் அத்தகைய அரசு இங்கு இல்லை என்பது துரதிர்ஷ்டம். 

தற்போது ஐந்து ரூபாய் பார்லி பிஸ்கட் துவங்கி பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடை கள் கூட விற்பனையாகவில்லை என்பது பேர திர்ச்சி. மனிதனின் அத்தியாவசிய தேவையான உள்ளாடைகளே விற்பனையாகவில்லை, 23 சதவீதம் குறைந்துள்ளது என்றால் தற்போது இந்திய பொருளாதாரம், உற்பத்தி ஆழமான நெருக்கடியின் துவக்கத்தில்  உள்ளது என்பதை அனைவரும் உணரமுடியும். இன்னும் சில மாதங்களில் இந்த நெருக்கடி அதிபயங்கர மாக வெளிப்படும் அபாயம் உள்ளது.  இந்த நெருக்கடியில்  இருந்து திசை திருப் பத்தான் 370 வது பிரிவு திரும்பப்பெறுவது, தீவிர வாதிகள் ஊடுருவல் என்று பதற்றத்தை உரு வாக்குவது, இதனை எதிர்த்து பேசுபவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது, அடக்கு முறையை ஏவி விடுவது என்பதை மேற்கொள்கிறார்கள். ஆனால் திசை திருப்பல் நடவடிக்கை எப்போதும் தீர்வல்ல என்பதே வரலாறு உணர்த்தும் பாடம். இந்த இக்கட்டான நிலையில் இருந்து இந்திய தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவோம், பாதிக்கப்பட்டிருக்கிற சிறு முதலாளிகளையும் உடன் இணைத்து வலுமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம். அத்தகைய துணிவு இந்திய தொழிற்சங்க மையத்திற்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.