tamilnadu

img

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... ஒரே நாளில் 1100 பேருக்குப் பாதிப்பு  

சிங்கப்பூர் சிட்டி 
கிழக்கு ஆசிய பகுதியில் 54 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் முழுவதும் அந்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில். ஏப்ரல் 2-வது வாரத்தில் கொரோனா பரவல் அங்குத் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் சிங்கப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அங்கு ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று புதிதாக யாரும் அந்நாட்டில் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவால் 11 பேர் பலியாகியுள்ளனர். 801 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் அந்நாட்டு அரசு  ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.