tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் ஒற்றுமை மேடை பிரச்சாரம்

சேலம், ஜன. 26- குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள் ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து பொதுமக்களி டையே மக்கள் ஒற்றுமை மேடை பிரச்சாரம் சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மத்திய பாஜக அரசு இந்திய இறை யாண்மைக்கு எதிராக கொண்டு வந்துள்ள  குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதி வேடு ஆகிய சட்டங்களை எதிர்த்து சேலம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. குறிப்பாக மத்திய பாஜக அரசு மத வாத பாசிச அரசை நிறுவுவதற்கு தான் குடி யுரிமை சட்டத்தை அமல்படுத்தியன் நோக் கம் எனவும் பொதுமக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டத் திற்குத் துணை போக கூடாது என தெரிவித் தனர்.  சேலம் கோட்டைப் பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடை தலைவர் திமுக சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகி சுபாஷ் தலை மையில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் அமைப்பின் செயலாளர் எம். குணசேகரன் பொருளாளர் எம். நாசர் கான் என்கிற அம்மான், சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, திமுக 31 வது கோட்ட நிர்வாகி சையது இப்ரஹிம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஷேக் முகமது, மாவட்ட செயலாளர் பரூக் என்கிற சையது முஸ்தபா, முஸ்லிம் லீக் சார்பில் அன்சர் பாஷா, சாதிக் பாஷா, சாகுல் ஹமீது, இஸ் லாமிய தொழிற்சங்கங்கள் சார்பில் முகமது அலாவுதீன், அப்சல் அஹமது, தமுமுக சார்பில் கொண்டலாம்பட்டி பகுதி தலைவர் முகமது ஜீலான், சையத் சலாவுதீன், உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.