tamilnadu

img

விவசாயிகள் பாதிக்காத வகையில் மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்தை செயல்படுத்துக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சேலம், மார்ச் 3- விவசாயிகள் பாதிக்காத வகை யில்  மேட்டூர் சரபங்கா நீரேற்று திட் டத்தை நீர்வழி பாதையில்  செயல் படுத்த வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  சேலம் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக் கப்பட்டது. தமிழக அரசு மேட்டூர் அணை யில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் வகை யில் சுமார் 565 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மேட்டூர் சரபங்கா நதி நீரேற்று திட்டத்தை அறிவித்து அதன் அடிக்கல் நாட்டு விழா மேட் டூரில் புதனன்று நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.  இந்நிலையில், இத்திட்டம் குறித்து தமிழக அரசு அப்பகுதி விவ சாயிகளின் கருத்தை கேட்காமல் செயல்படுவதாகவும், விவசாய நிலம் வழியாக இந்த திட்டம் செயல் படுத்த படுவதால் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு விவ சாய சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள் ளனர்.  ஆகவே, விவசாயிகள் பாதிக் காத வகையில் ஏற்கனவே உள்ள நீர்வழி பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று சேலம்  மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் சரவணன், கொங்கணா புரம் ஒன்றிய  தலைவர் செம்மலை யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.