சேலம், ஜூன் 7- இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியின் போது மரணம் அடைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெ.மதியழகன் உடலுக்கு மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் அஞ்சலி செலுத்தினார். இந்திய ராணுவம், 17-வது சென்னை படைப்பிரி வில் அவில்தாராக பணிபுரிந்து, ஜம்மு யூனியன் பிர தேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகளின் தாக்குதலால் ஜூன் 4ஆம் தேதியன்று வீர மரணம் அடைந்த சேலம் மாவட்டம், எடப்பாடி வட் டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த பெ.மதியழகன் உடல் சேலம் மாவட்டம், எடப் பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத் தில் உள்ள அவரது இல்லத்திற்கு சனியன்று கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மதியழகன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் பெ.மதியழகன் மனைவி தமிழரசியிடம் முதலமைச்சரின் கார்கில் படை வீரர்களின் நிவாரண நிதியிலிருந்து கருணை தொகை ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார். இதில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் தீபா காணிகர், முன்னால் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரபாகர், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அமிர்த லிங்கம், எடப்பாடி வருவாய் வட்டாட்சியர் கோவிந்த ராஜ் உட்டபட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏரளமான பொதுமக்கள் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பெ.மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி னர்.