tamilnadu

img

பள்ளி சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு சுகாதார சீர்கேட்டை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

இளம்பிள்ளை, டிச. 23- மர்ம காய்ச்சலால் சிறுமி உயி ரிழந்ததையடுத்து இளம்பிள்ளை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கத்தாளப்பேட்டை, பாட்டப்பன் கோவில், அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜ்குமாரின் மகள் நிஷா (7). அரசு பள்ளியில் 2ஆம்  வகுப்பு படித்து வந்தார். கடந்த டிச. 19ஆம் தேதி அன்று கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி டிச.22-ம் தேதி ஞாயிறன்று உயிரிழந்தார். இத னையடுத்து அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்களன்று சுகாதார சீர் கேடு அதிக அளவில் உள்ளதாக வும், இதனை பல முறை நாங்கள்  எடுத்துக் கூறியும் சுகாதார பணி கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் சிறுமி உயிரிழந் தார் என இளம்பிள்ளை பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர்.  இதற்கு செயல் அலுவலர் முறையான பதில் அளிக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து காக்காபாளையம் - இளம்பிள்ளை செல்லும் சாலை யில் சந்தப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார், உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது பொது மக்கள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதி அருகே உள்ள ஏரியை தூய்மைப்படுத்த ரூ.2.36 கோடி  மதிப்பில் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.  மேலும் அங்கு கட்டப்பட்ட சுத்தகரிப்பு தொட்டியில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி யாகிறது. இதனால் பாதிக்கப் பட்ட ஒரு சிறுமி தற்போது உயிரி ழந்துள்ளார். மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். எப்படி  அப்பகுதியில் குடியிருக்க முடியும என்றனர்.  இதன்பின்னர் பாட்டப்பன் கோவில் பகுதியில் நிலவும் சுகா தாரக்கேடு குறித்து செயல் அலுவ லர் நேரில் பார்வையிட்டு, இதனை  தூய்மைப்படுத்தி தருவதாக தெரி வித்தார். இதனையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.