tamilnadu

தந்தை, மகனை அடித்துக் கொன்ற சாத்தான்குளம் காவல்துறை - நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 26- சாத்தான்குளம் காவல்துறையின ரின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத் திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்கு ளம் பகுதியில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். இந்த கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடு பட்ட அனைத்து காவலர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், நகரச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  

கோவை  

கோவை காந்திபுரத்திலுள்ள மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பட்டத் திற்கு கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்து றையை கண்டித்து ஆவேச முழக்கங் களை எழுப்பினர். இதேபோல் பொள் ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.  

திருப்பூர்

திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக குமரன் சாலை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித் தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், நகர செயலாளர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இதே போல், திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தரும புரி, மொரப்பூர், பென்னாகரம் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பிர் ்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.  

நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி, மலை, சத்தி, கோபி, பெருந்துறை, பவானி, புளியம்பட்டி உட்பட பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட் பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.