சேலம், செப். 19- கொரோனா நோய்த்தொற்றால் உயிரி ழந்த தொழிலாளின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்கக்கோரி சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை பணிமனையில் வெப்ப உருட்டாலை பிரிவில் பணியாற்றி வந்தவர் சீனியர் டெக்னீசியன் எம்.ஆர்.கண் ணன். இவருக்கு அண்மையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து சேலம் அரசு பொது மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலை யில் சனியன்று சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த எம்.ஆர்.கண் ணனின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் உருக்காலை தொழிற்சங்கத்தினர் உருக்காலை நுழைவாயில் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு உருக்காலை தொழிற்சங்க பொது செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.