சேலம், மே 31- கொரோனா நிவாரணமாக அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிக ளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது கொரோனா ஊரடங்கு காலத் தில் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். அடுத்து 6 மாதங்களுக்கு அனைத்து தனிநபர்களுக்கும் மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கிட வேண்டும். அனைத்து வகை தொழி லாளர்களுக்கும் நல வாரியங்கள் மூலம் உதவி தொகை தாமதமின்றி வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலசட்டங்களை சிதைக்கும் முடி வினை மத்திய அரசு கைவிட வேண்டும். புலம்பெயர்ந்த தொழி லாளர்களை அலைக்கழிக்காமல் சொந்த ஊருக்கு இலவசமாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் அதிக வட்டியை வசூ லிப்பதை நிறுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரி யும் மருத்துவர்கள், செவிலியர்கள், அடிப்படை ஊழியர்கள், மாநக ராட்சி பணியாளர்கள் அனைவருக் கும் சிறப்பு ஊதியம் மற்றும் பாது காப்பு உபகரனங்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப் பட்டனர். இதில், சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் பொன் ரமணி, மாநகர செயலாளர் பி.ரமணி, மாநகரகுழு உறுப்பினர் கள் ஜி.சுல்தான், சி.சம்பத்குமார், கே.பச்சமுத்து, வி.பெரியசாமி, எம்.திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏரா ளாமானோர் பங்கேற்றனர்.