சேலம், டிச.21- சேலத்தில் பவர்கிரிட் நிறுவனத்தினர் மின்சா ரத்தை திருடி மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஈடு பட்டபோது மின்கசிவு ஏற் பட்டு மாடு பலியானதுடன், விவசாயி ஒருவர் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயர் மின்னழுத்த கோபு ரங்கள் அமைக்கும் பணி யினை பவர்கிரிட் நிறுவனம் செய்து வரு கிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செலவடை கிராமத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பவர்கிரிட் ஊழியர்கள் அருகில் உள்ள மின் மாற்றியில் மின்சார வயர் மூலம் மின் சாரம் எடுத்துள்ளனர். இதையடுத்து கோபுரம் அமைக்க துளையிட்டு கொண் டிருந்தபோது அங்கு மேய்ச்சலுக்காக விடப் பட்டிருந்த சத்யா என்பவரின் மாடு மின் வயரை மிதித்துள்ளது. அப்போது மின் சாரம் பாய்ந்து மாடு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இதற்கிடையே மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி சத்யாவும் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளனர். இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் பாதிக் கப்பட்ட சத்யாவின் குடும்பத்தினரை பவர்கிரிட் ஊழியர்கள் சந்தித்து, இச் சம்பவம் குறித்து வெளியில் கூற வேண் டாம் எனவும், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டாம் எனக்கூறி ரூ.68 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். அதேநேரம், அரசு நிறுவனமான பவர் கிரிட் நிர்வாகமே மின்சாரத்தை திருடி மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதும், அதனால் கால்நடை ஒன்று பலியானதுடன், அதன் உரிமையாளர் தீவிர சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி யினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.