சேலம், ஆக.1- சேலம் அன்னை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி முதல் தி மதர்ஸ் டிரஸ்ட் சேலம் என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட தொடர்ந்து பல்வேறு நபர்களுக்கு உதவிகள் கடந்த ஓராண்டாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், இருபதாயிரத்திற்கும் அதிகமான வயது முதிர்ந்த ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள அனைவருக்கும் உணவு பொருட்கள், ஆடைகள் வழங்கப் பட்டுள்ளன. இதுவரை கடந்த ஓராண்டில் 137 முறை அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தி மதர்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளைக்கு தனது அலுவலக நண்பர்கள், உறவினர்கள் உதவி உள்ளதாகவும், நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான நண்பர் கள் அதிகப்படியான உதவிகளை வழங்கி வருவதாகவும் தொடர்ந்து இந்தப் பணி செயல்படும் எனவும் அறக் கட்டளையின் நிறுவனர் பிரதீப் தெரிவித்தார்.