சேலம், மார்ச் 9- கோவை இருகூர் முதல் பெங்க ளூரு வரை ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விவ சாயிகளின் விளை நிலங்களில் செயல்படுத்தக் கூடாது எனவும், அதனை மாற்று வழியில் செயல் படுத்த வேண்டும் என பாதிக்கப் பட்ட விவசாயிகள் சேலத் திலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவன மானது, கோவை இருகூரிலி ருந்து பெங்களூர் வரை கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண் ணெய் குழாய் பதிக்க திட்டமிட் டுள்ளது. இத்திட்டத்தால் 7 மாவட்டங்களில் 317 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 ஆயிரத்திற் கும் மேற்பட்ட விவசாயிகளின் 1,300 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் இத்திட்டத்திற்கு 7 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தியும், விவசாயிக ளுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித் தும் திங்களன்று பாதிக்கப் பட்ட விவசாயிகள் சேலத் திலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, குரங்குசாவடி யில் இருந்து அழகாபுரத்தில் உள்ள நிலம் கையகப்படுத்தும் அலுவலகம் நோக்கி விவசாயிகள் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந் தப்பட்ட அதிகாரியிடம் அளிக்க முயன்றனர். அப்போது பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஊர்வலத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பந் தப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அலுவலர் போராட்ட களத்திற்கு நேரில் வந்து விவசாயிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு ஒப்புகை சீட்டை வழங்கி னார். இதையடுத்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். முன்னதாக இப்போராட் டத்தில், திமுக விவசாய தொழி லாளர் அணி இணைச் செயலாள ரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.காவேரி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மாநில தலை வரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் டி.ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர் வாகி வழக்கறிஞர் மு.ஈசன், தமிழ் நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனு சாமி தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.இராம மூர்த்தி, நாமக்கல் மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், பொன்னுசாமி மற்றும் பாதிக்கப் பட்ட விவசாயிகள் எண்ணற்றோர் பங்கேற்றனர்.