இளம்பிள்ளை, ஆக. 2- பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் நீர்வழிப் பாதைகள் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெரு மாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதிகளை கடந்த மாதம் ஜூலை 18 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை காலங்கள் என்பதால் டெங்கு காய்ச்சல் தடுப் புப் பணிகளை தீவிரப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் இளம் பிள்ளை - நடுவனேரி நீரோடை பல வருடங்களாக தூர்வாரப் படாமல் இருந்து வருகிறது. இதனால் மழைக் காலங்களில் ஏரி வழியாக வெளியேறும் நீரானது மக்கள் குடியிருப்புகளில் புகாமல் இருக்க நீரோடையைத் தூர்வார வேண்டும் என அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஞாயி றன்று இளம்பிள்ளை சந்தப்பேட்டை ஏரி முதல் நடுவ னேரி ஏரி வரையில் உள்ள நீர்வழிப் பாதையை தூர் வாரி சுத்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.