சேலம், மே 10 - போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை 12 மணி நேர மாக அதிகரிக்கும் மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் நடவடிக் கையை மத்திய அரசு கைவிட வேண் டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. கொரோனா ஊர டங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகையாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று பல்வேறு இடங்களில் சிஐடியு தொழிற் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.
சேலம் மாவட்டத்தில் அரியாக் கவுண்டம்பட்டியில் கட்டுமான சங்க நிர்வாகி எம். கே. ஜெயபாலன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் பால் மார்க்கெட் பகுதியில் ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதியழ கன் தலைமை தாங்கினார். மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. இ ளங்கோ தலைமை தாங்கினார். சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கம் சார்பில் சேலம் ஜங்ஷன் கூட்செட் அருகில் சுந்தர் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் பங்கேற்று மத்திய அர சின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆவேச முழக் கங்களை எழுப்பினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி யில் 15 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலை வர் பி. முத்துச்சாமி, சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஏ.ஈஸ்வர மூர்த்தி மற்றும் பி.பழனிச்சாமி உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
கோவை
கோவையில் நூற்றுக்கும் மேற் பட்ட பகுதிகளில் சிஐடியு அமைப் பினர் அவரவர் வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மத்திய அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கோரிக்கை அட்டை ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், பாய்ஸ் கம்பெனியில் சிஐடியூ தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.சுந்தரம், பரமூலை பகுதி் செய லாளர் ஆர்.ரமேஷ், பிங்கர் போஸ்ட் பகுதியில் பொருளாளர் ஏ.நவீன் சந்திரன், கோத்தகிரி ஈளாடாவில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ம கேஷ், பந்தலூரில் மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், அதிகரட்டி யில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் ஜெ.ஆல் தொரை, எல்க்ஹில் பகுதியில் மாவட்ட செயலாளர் மகேஷ், பெரிய பிக்கட்டி பகுதியில் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொது துணைச்செயலாளர் கணேசன் ஆகி யோரது தலைமையில் ஆவேச ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட குழு உறுப் பினர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.