districts

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக  வளர்ச்சித் துறை  அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்  

தஞ்சாவூர், மார்ச் 24 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்கம் சார்பில், மாநில செயற்குழு முடிவின் படி, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.  கிராம ஊராட்சி செயலா ளர்கள் அனைவருக்கும் கரு வூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு வழங் கப்பட்ட அனைத்து உரிமை களையும் வழங்க அரசாணை  வெளியிட வேண்டும். மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கணினி உதவியாளர்களுக்கு ஏற்க னவே வெளியிடப்பட்ட அரசா ணைப்படி, இளநிலை உதவி யாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து,  பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் பனகல் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார்.  மாநிலத் தலைவர் ரமேஷ்  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி  வைத்தார். மாவட்டச் செய லாளர் கை. கோவிந்தராஜன், பொருளாளர் தேசிங்கு ராஜன் உள்ளிட்டோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் ஊராட்சி செயலா ளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கு கொண்டனர்.