சேலம், ஜூன் 29- தமிழக முதலமைச்சர் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூறு நாள் வேலை வழங்கப்படாத அவலம் நீடித்து வருவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டு களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் பணி கள் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் எடப் பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்ட செயலாளர் கே.லோக நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வி.தங்கவேல், செயலாளர் ஜி.கணபதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சி.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், சங்க நிர்வாகிகள் மாணிக் கம், இந்துமதி, ராஜா, வீராசாமி, சின் னுசாமி, ராமமூர்த்தி உள்ளிட்டு இரு நூறுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எடப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட் டது. அப்போது, இருப்பாளி விவ சாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை வழங்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட் டது.
ஓமலூர்
இதேபோல் ஓமலூர் ஒன்றியத்தில் நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சின்ராஜி தலைமை தாங்கினார். இதில் கோவிந்தராஜ் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொங்கணாபுரம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பி.தங்கவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் துரைசாமி, மாவட்ட நிர்வாகிகள் பழனியப்பன், சேகர், வெங்கடேசன், சுப்பிரமணி, மூர்த்தி, சின்னத்தம்பி, கந்தசாமி, லோகநாதன் உள்ளிட்டு 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆத்தூர்
தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளில் உள்ள ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை கேட்டு தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டதிற்கு தாலுகா தலைவர் எல்.கலைமணி தலைமை தாங்கினார். சிபிஎம் தாலுகா செயலாளர் எ.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். விதொச செயலாளர் கே.அழகு துரை, மற்றும் எ.அமானுல்லா, சி. மாரிமுத்து, முத்துசாமி, கிருஷ்ணன், பாப்பாத்தி மற்றும் அஞ்சலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.