இளம்பிள்ளை, பிப் 17- சேலத்தில் கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளை யடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் அரியானூர் பேருந்து நிறுத்தம் பகு தியில் கனரா வங்கி ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி யில் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதாலும், இதில் பயிலும் வெளிமா நில மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுப்பகுதியில் சேர்ந்தவர்கள் இந்த ஏடிஎம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஞாயிறன்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்றபோது அங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடம் வந்து விசா ரணை நடத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவு களை வைத்து விசாரணை நடத்தினர். இதில் சனி யன்று நள்ளிரவில் மர்ம வாலிபர் ஒருவர் கடப்பாரை கம்பியை எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையத்திற்குள் புகுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை பலமுறை உடைக்க முயற்சி செய்தும்,அதனை உடைக்க முடி யாமல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதனையடுத்து ஏடிஎம் மையத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பார்த்த போது அதில் ரூ.11 லட்சத்து 11 ஆயிரம் பணம் அப்ப டியே இருந்தது.இயந்திரத்தை உடைக்க முடியாத தால் பணம் தப்பியது. அங்குள்ள சிசிடிவி கேம ராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.