போரூர் ,மார்ச் 28- சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலையில் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நள்ளிரவு 1.30மணி அளவில் வந்த மர்ம நபர் ஏ.டி.எம் எந்தி ரத்தை கற்களால் உடைக்க முயன்றார். இந்த காட்சி ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கே.கே நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க முடி யாததால் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.