சேலம்:
கர்நாடகாவில் இருந்து நடப்பாண்டில் 23 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக மேட்டூர் அணைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை மூலம் சேலம்,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் ஜனவரிமாதம் 28ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 300 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் பெய்யும்
மழையை பொறுத்து தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர் நோக்கி ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்திகரமாகஇருந்ததால் குறித்த நாளான ஜூன்மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டாபாசனத்திற்கு மேட்டூர்அணையில்இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததால் கடந்த சில நாட்களாகமேட்டூர் அணையில் இருந்து காவிரியில்1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வந்தது. வியாழன் மாலை காவிரி பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டது.
இதனால் கடந்த ஆண்டு ஜூன் 12ஆம்தேதி முதல் வியாழனன்று மாலை வரைமேட்டூர் அணையில் இருந்து காவிரிடெல்டா பாசனத்திற்கு 164.97 டி.எம்.சி.தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்தஆண்டு 250.04 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால்கடந்த ஆண்டைவிட மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு 85 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக காவிரி டெல்டாபாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீர் மூலமும், மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நடப்பு நீர் பாசன ஆண்டில் 200.14 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி கர்நாடகா ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 12 மாதங்களில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும், ஆனால் தற்போது வரை 200.14 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளதால் கர்நாடகாவில் இருந்து கூடுதலாக 22.89 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.வியாழனன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் 105.98 அடியாக இருந்தது