சேலம், நவ.13- தமிழக முதல்வரின் தொகுதி யான எடப்பாடியில் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் விநி யோகம் செய்ய மறுத்து அராஜக மாக நடந்து கொள்ளும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்குட்பட்டது தாண்டவன் வளவு கிராமம். இங்குள்ள கரிக் காப்பட்டி கிராமம் தோரமங்கலம் பகுதியில் வசித்து வரும் செல்வி, சித்ரா, லட்சுமி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் ஆழ்துளை கிணறு அமைக் கப்பட்டது. இங்கிருந்து பொது மக்களுக்கும், இடம் வழங்கிய குடும் பத்தாருக்கும் குடிநீர் விநியோகிக் கப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பாலுசாமி என்பவர் மின் மோட்டார் ரூம் சாவியை சித்ரா குடும்பத்திடமிருந்து வலுக்கட்டா யமாக பெற்றுக் கொண்டுள்ளார். இதன்பின்னர் தான்தான் இனிமேல் தண்ணீர் திறந்து விடுவேன் எனவும், தனக்கு விருப்பப்பட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் திறந்து விடு வேன் எனவும் அடாவடியாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் மனு வழங்கியும் அதிமுக பிரமுகர் என்பதால் பாலுசாமியின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சித்ராவின் கணவர் மீது பொய் வழக்குகளை புனைந்து இரு முறை சிறையில் அடைத்துள் ளதாக கூறப்படுகிறது. இவ் வாறு தொடர்ந்து பாலுசாமி அரா ஜகமாக நடந்து கொண்டு வரும் நிலையில் செவ்வாயன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நங்க வள்ளி ஒன்றிய செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமையில் அப் பகுதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித் தனர். இந்த மனுவில் தமிழக முதல் வரின் சொந்த தொகுதியான எடப் பாடியில், பொதுமக்களுக்கு பாது காப்பு இல்லாத சூழல் ஏற்பட் டுள்ளது. அதிமுக பிரமுகராக உள்ள பாலுசாமி தொடர்ந்து அராஜகமாக நடந்து கொள்வதுடன், அங்குள்ள பொதுமக்களை தரக்குறைவாக பேசி வருகிறார். ஆகவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இம்மனுவினை அளிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன், நங்க வள்ளி தாலுகா குழு உறுப்பினர் ஜி.கவிதா மற்றும் பாதிக்கப்பட்ட சித்ரா குடும்பத்தினர் உள்ளிட்ட அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.