உதய்பூர்:
ராமர் கோயில் கட்டும் பணிகள் நிச்சயமாக நடைபெறும்; அதற்கான பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பகவத் பேசியுள்ளார். அப்போது, “ராமர் கோயிலுக்கான வேலை மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இது நமது பணி, நாம் தான் இதனை செய்ய வேண்டும். இந்த பொறுப்பை நாம் ஒருவரிடம் வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும்” என்று பகவத் குறிப்பிட்டுள்ளார்.
ராமர் கோவில் பிரச்சனை தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. எனினும் ராமர் கோவில் கட்டுமானத்தை நிறைவு செய்யத் தேவையான எல்லா வாய்ப்புகளையும் கட்சி பரிசோதிக்கும் என்று பாஜக அதன் 2019 தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப் பத்ரா’வில் தெரிவித்திருந்தது. தற்போது இரண்டாவது முறையாக ஆட்சிக்கும் வந்துள்ளது.இந்நிலையிலேயே, ராமர் கோயில் வேலை நிச்சயமாக நடக்கும் என்றும் அதற்கான பொறுப்பை ஒருவரிடம் (மோடி?) ஒப்படைத்துள்ளோம் என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.