tamilnadu

img

தியாகி லீலாவதி நினைவு நாளில் இளைஞர்கள் ரத்த தானம்

மதுரை, ஏப்.23- இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மதுரை மாநகர் மாவட்ட ரத்த தானக் கழகம் மற்றும் அரசு ராஜாஜி மருத்து வமனை சார்பில் தியாகி லீலா வதியின் இருபத்தி மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ரத்த தான முகாம் தெற்குவாசல் பகுதி வில்லா புரத்தில் நடைபெற்றது.

முகாமினை மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா. செல்லம் மற் றும் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகி யோர் துவக்கி வைத்தனர். மாவட்டத் தலைவர் பி.கோபி நாத், செயலாளர் டி. செல்வ ராஜ், பொருளாளர் ஜெ. பார்த்தசாரதி, பகுதிக் குழு செயலாளர் சதாம் உசேன், மாவட்ட நிர்வாகிகள் வடி வேல், ஏ.பாவேல் சிந்தன், எஸ். சரண் மாவட்டக்குழு உறுப்பினர்கள் நவீன், குரோனி செந்தில், ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூக இடை வெளியை கடைபிடித்து ரத்த தானம் வழங்கினர்.