சென்னை,ஆக.20- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக ஆறு மாத பரோல் கோரி நளினி வழக்கு தொடர்ந்த நிலையில், ஒரு மாத பரோல் வழங்கி கடந்த மாதம் 5-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி கடந்த 8-ஆம் தேதி அவர் அளித்த மனுவை தமிழக அரசு நிராகரித்தது. இந்நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு உத்தர விட்டுள்ளது.