ஆண்டிப்பட்டி:
கஞ்சா விற்பனை : தாய் - மகன் உட்பட மூவர் கைதுதேனி சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறைக்குத் தெரியாமல் கஞ்சா விற்பனை மளிகை வியாபாரம் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மலை வாசஸ்தலமாகக் கஞ்சா விற்பனை தொடர்பான தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தின் முக்கிய நகரான ஆண்டிப்பட்டியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினர். ஆண்டிப்பட்டி - வைகை அணை சாலை பாலம் பகுதியில் ரோந்து வந்த போது காவல்துறையினரைக் கண்டதும் 2 பேர் பதுங்கினர். அவர்களை விசாரித்த பொழுது ஆண்டிப்பட்டி சீத்தாராம் நகரை சேர்ந்த சிவக்குமார்(48), அவரது தாய் சகுந்தலா (65) என்பது தெரியவரச் சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல போடி நகரின் மையப் பகுதி நகராட்சி கழிப்பறை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த லட்சுமி(63) என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.