tamilnadu

அடிப்படை வசதிகள், அங்கீகாரமற்ற 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சென்னை, ஜூன் 7- அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும்  இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளி களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக  அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூரில், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில்,  இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி கோரிக்கை மனு அளித்தும்  நடவ டிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30  பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்  பட்டுள்ளதாகவும் உரிய சட்ட நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக் கத்தை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.