tamilnadu

img

மலேசியாவிலிருந்து காலியாக வரவுள்ள விமானங்களில் இந்தியர்களை அழைத்துவர நவாஷ்கனி எம்.பி., கோரிக்கை

இராமநாதபுரம்:
பிழைப்புக்கு, சுற்றுலாவுக்கு மலேசியாவிற்கு சென்ற 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழர்களை சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவர்களை  அழைத்துவர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஷ்கனி  வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இன்னும் ஒருசில தினங்களில் மலேசியாவிலிருந்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக 12 விமானங்கள்  இந்தியாவிலிருக்கும்  மலேசிய மக்களை அழைத்துச் செல்ல வரவுள்ளது. அந்த விமானங்கள் மலேசியாவிலிருந்து காலியாகத்தான் இந்தியாவிற்கு வரும். அதில் இந்தியர்களை அழைத்துவர வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.