முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
கோவை, பிப்.8- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரது சொந்த கருத்து, அதிமுகவின் கருத்தல்ல என கோவை விமான நிலை யத்தில் சனியன்று தமிழக முதல்வர் எடப் பாடி பழனிச்சாமி் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், சேலம் தலை வாசல் பகுதியில் நடைபெறும் தெற்காசியாவி லேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வு களில் பங்கேற்க வந்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடை பெற்ற முறைகேடு குறித்து தற்போது விசா ரணை நடைபெற்று வருகின்றது. தவறு செய்த வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வரு கின்றது. விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்த அரசு விரும்புகின்றது. என்ன தவறு என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வய தானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உத விக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத் தம் அளிக்கிறது. இந்த ஆண்டு வறட்சி என்ற சொல்லே இல்லை. நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின் றது என தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். அது அதிமுகவின் கருத்து கிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தி இருக்கிறார். 9,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, பள்ளி களில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும். மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும். இடை நிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது என்றார். முன்னதாக, இந்த பேட்டியின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.