சென்னை, அக். 18- தமிழக அரசு ஊழியர்களின் அக விலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், மேலும் 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அக விலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள் ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.