சென்னை, செப். 28- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவ கல்வி இயக்கு நர் டாக்டர் நாராயண பாபு உத்தர விட்டுள்ளார். நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யாவை திருப்பதியில் வைத்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர். உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆவார். இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரிய ராக பணியாற்றி வந்தார். உதித் சூர்யா வுக்கு ஆள்மாறாட்டம் செய்வதில் உடந்தை யாக இருந்ததற்காக காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர். இதை யடுத்து கைது நடவடிக்கை குறித்து மருத்து வக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவுக்கு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆள்மாறாட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.