சேலம், மார்ச் 18- சேலத்தில் புதனன்று வீடு இடிந்து கட்டிட தொழி லாளி பரிதாபமாக உயிரி ழந்தார். சேலம் குகை அடுத்த மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் வீட்டின் அருகே புதிய தாக கார்ஷெட் அமைத்து வருகிறார். இந்த கட்டு மான பணிகளை சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த சின்னசாமி, பரமசிவன், சாரதி ஆகியோர் செய்து வந்தனர். கடந்த 2 வாரமாக இப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதனன்று வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சின்னசாமி தான் கொண்டு வந்திருந்த பையை எடுத்து வருவதாக கூறி விட்டு கார்ஷெட்டிற்கு பின்புறமாக சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த இடிக்கப்பட்ட வீட்டின் சுவர் திடீரென அவர் மீது சரிந்தது. இதில், இடிப்பாடுகளில் சிக்கி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பரமசிவன், சாரதி ஆகியோர் சின்னசாமியை மீட்க முற் பட்டும் முடியவில்லை. இதையடுத்து, செவ்வாய்பேட்டை தீ யணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்புத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சின்னசாமியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்த செவ்வாய் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.