tamilnadu

கிசான் திட்டத்தில் விவசாயிகள் 2000 ரூபாய் பெற ரூ 500 லஞ்சம்

நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, மே 14 - பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயி கள் 2ஆயிரம் ரூபாய் பெற 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது: பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு  முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் உதவித்  தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை மூலம்  இணையத்தளத்தில் விபரங்கள் இருக்க  வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. ஆதார் அட்டை விவரங்களை பதி வேற்றம் செய்யாத விவசாயிகள் புதிதாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் வேளாண் துறையைச் சேர்ந்த சில அதிகாரி கள் புரோக்கர்கள் மூலம் ஒரு மனுவிற்கு 500 ரூபாயும், ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்ய 250 ரூபாயும் வசூல் செய்கின்றனர். இந்த முறைகேடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் குழு அமைக்கப்பட்டு மே 13ஆம்  தேதி திருநாவலூர் ஒன்றியத்தில் சில கிரா மங்களில் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.

கோட்டையாம்பாளையம் கிராமத்தில்  சரஸ்வதி மூலம் 150 பேரிடமும், பெரும்பாக் கம் ஊராட்சி மல்லிகா கிராமத்தில் செந்தில் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மூலம் 200 பேரிடமும, மதியனூர் கிராமத்தில் சிவ ராமன் மூலம் 100 பேரிடமும், கீழ்குப்பம் வேலூர் கிராமத்தில் அய்யாசாமி மூலம் 100  பேரிடமும் ஒரு மனுவிற்கு தலா 500 ரூபாய்  என வசூலித்துள்ளனர். இம் முறைகேடுகள் அனைத்தும் திருநாவலூர் ஒன்றிய வேளாண்  துறையில் பணிபுரியும் டி.தங்கவேல் (டிஒய்ஏஓ) என்பவரின் நேரடி கண்காணிப்பில்  நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

மேலும், இதுபோன்ற முறைகேடுகள் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்க ளிலும் நடைபெற்று வருவதாக எங்கள் கட்சி  விசாரணை குழுக்களின் மூலம் தெரிகிறது. எனவே இது குறித்து மாவட்ட அளவில் ஒரு  உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்திட வேண்டும், திருநாவலூர் ஒன்றி யத்தில் மேற்கண்ட கிராமங்களில் விவசாயி களிடம் வசூலித்த பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும். விசாரணைக் குழுவின்  விசாரணை அடிப்படையில் முறைகேடுகள் புரிந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.