tamilnadu

img

கிசான் திட்டத்தில் மோசடி: சிபிசிஐடி விசாரணைக்கு கோரிக்கை

சென்னை:
விவசாயிகளுக்கான உதவி திட்டத்தில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின்பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-பிரதமரின் சிறு- குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்தில் மாபெரும் மோசடி நடைபெற்றுள் ளது குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இத்தகைய முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.இந்த மோசடியில், வேளாண்மை துறை அதிகாரிகள், இணைய மையங்களை நடத்துபவர்கள் இவர்களுக்கிடையில் தரகர்களாக செயல்பட்டவர்கள் என பலநூறு பேர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

சிறு- குறு விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய அரசின் நிதி உதவியை இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற நபர்கள் பெயரை பட்டியலில் சேர்த்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து பலனடைந்திருக்கிறார்கள். எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கள்மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண் டும். மக்களுக்கான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஊழல், முறைகேடு, மோசடி என் பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்கெதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்.மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற எங்களை அணுகுங்கள் என்று பாஜக கட்சியை சார்ந்த பலர் பகிரங்கமாக விளம்பரம் செய்தனர். அவர்களுக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், தகுதியற்ற நபர் கள் நீக்கப்பட்டு உண்மையான விவசாயிகளுக்கு அரசின் திட்ட உதவிகள் சென்று சேர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.பல மாவட்டங்களிலும் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாலும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், மோசடி பேர் வழிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப் பதாலும் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.இந்த மோசடி வெளிச்சத் துக்கு வந்ததையொட்டி திட் 
டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவார்கள்.எனவே, விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்குமாறு வேண்டும்.இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.