புதுச்சேரி முதல்வரிடம் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்
புதுச்சேரி,செப்.22- சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விழாவில் முதல்வர் நாராயண சாமி பங்கேற்கக்கூடாது என்று எழுத்தா ளர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையொப்பம் இட்ட கோரிக்கை மனுவை முதல்வர் நாராயணசாமியை ஞாயிறன்று சந்தித்து வழங்கினார்கள். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை யின் ஆதரவோடு ஒருகுழு இந்துத்துவ வகுப்புவாத வெறியைப் புதுச்சேரியில் விசிறிவிட முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் எடுத்த எச்சரிக்கை நடவடிக்கைகளால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சில், பிரெஞ்சு தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் அதே குழு வருகிற 2019, செப்டம்பர் 27 முதல் 29 வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழா என்ற பெயரில் நடத்தவிருக்கிறது.அதில் வகுப்பு வாத ஆர்.எஸ்.எஸ், பா..ஜ.க அகில இந்தியப் பொறுப்பாளர்கள் பங்கேற்கி றார்கள். ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் தொடர்கிறது. இந்நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.எனவே புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புக ளின் பிரதிநிதிகள் முதல்வரை நேரில் சந்தித்து, இவ்விழா இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான இந்துத்து வத்தைப் பரப்பிடும் நோக்கில் திட்டமிடப்பட்டு ள்ளது எனவே தாங்கள் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
சாகித்திய அகாடமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்க மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலாளர் பலகங்காதரன், தனித்தமிழ் இயக்கம் முனைவர் க.தமிழ மல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக பொது செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர,அரிகிருஷ்ணன் உட்பட பல எழுத்தாளர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.