tamilnadu

img

சாலை, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 50கிராமங்களைச் சேர்ந்த மக்கள், குடிநீர், கழிப்பிட வசதி, சாலை, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திங்களன்று மாபெரும் பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.