tamilnadu

img

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊதியம் வழங்க கோரி சிஐடியு வழக்கு

சென்னை, மே 21- தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊதியம் வழங்கக்  கோரி சிஐடியு சார்பில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) சார்பில் கே.சி. கோபி குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை  வருமாறு: கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க, அவற்றிலிருந்து மக்  களை பாதுகாத்திட மார்ச் 24 முதல்  நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கால கட்  டத்தில் தோட்ட தொழில் உட்பட அனைத்து தொழில்களும் முடக்கப் பட்டன. மத்திய அரசு ஊரடங்கு காலத் தில் வேலையிழந்து இருக்கும் தொழி லாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று நிர்வாகங்க ளுக்கு ஆணையிட்டது. இந்த அறி விப்பால் தொழிலாளர்கள் ஓரள வுக்கு மகிழ்ச்சியோடு இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் தோட்டத் தொழில் கடந்த 1.4.2020 முதல் துவங்கப்பட்டது. ஊழியர்க ளும் தகுந்த பாதுகாப்புடன் வேலைக்கு திரும்பினர். வேலைக்கு திரும்பிய அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மார்ச் மாத ஊதியத்தில் ஊர டங்கு காலமான எட்டு நாட்களுக்கான  ஊதியம் வழங்கவில்லை. தொழிலா ளர்கள் வேலைக்கு வர தயாராக இருந்தும் ஊரடங்கு காலமாக இருந்த தாலும் மத்திய அரசின் அறிவுறுத்த லின் பேரிலும் தொழிலாளர்கள் வேலைக்கு போகமுடியாத சூழல்.  ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்த லையும் ஏற்காமல் மதிக்காமல் தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்க நிர்வாகங்கள் மறுத்தது. நீலகிரி மாவட்ட எஸ்டேட் தொழி லாளர் சங்கம் (சிஐடியு) தமிழ்நாடு  தோட்ட தொழிலாளர் ஒருங்கி ணைப்புக் குழு,  தோட்ட நிறுவன  சங்கமான பிளான்டர்ஸ் அசோசி யேஷன் ஆப் தமிழ்நாடு மற்றும் தமி ழக தொழிலாளர் துறை முதன்மை தோட்ட ஆய்வாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியது. மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சி யர் முன்னிலையில் முத்தரப்பு கூட்ட மும் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் 48 மணி நேரத்திற்குள் பிடித்தம் செய் யப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாகங்கள் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகளையும் மதிக்காமல் இன்று வரை ஊதியம் வழங்காமல் பிடிவாத நிலையை கடைப்பிடிக்கின்றன.

சங்கத்தின் சார்பாக அனுப் பிய கடிதத்திற்கு எந்தவித பதிலும்  இல்லாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) சார்பாக எட்டு நாள் ஊதி யம் கேட்டு பொது நல வழக்கு தாக்  கல் செய்யப்பட்டுள்ளது.  மலைகளில் வாழும் மக்கள் பல்  வேறு இன்னல்களுக்கு ஆட்படு கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்ப டும் ஊதியம் என்பது மிகவும் சொற்  பமானது. சிஐடியு உள்ளிட்ட மத்திய  தொழிற்சங்கங்கள் தோட்ட தொழி லாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18000 வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளது. அவற்றை யும் அமல்படுத்த தோட்ட நிர்வா கங்கள் மறுக்கின்றன. ஊரடங்கு காலத்தில் தொழி லாளர்கள் பாதிக்கக்கூடாது என்று மத்திய மோடி அரசு ஊரடங்கு காலத்திலும் ஊதியம் வழங்க வேண்டுமென்று அளித்த ஆணை களை 15.5.2020 அன்று திருப்பி பெற்று கொண்டுள்ளது. இந்த நட வடிக்கை முற்றிலும் தொழிலாளர் களை ஏமாற்றுவதும் திசைதிருப்பு வதாகும். அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்தும் எதிர்த்தும் இந்த பொது நல வழக்கு தொட ரப்பட்டுள்ளது.